Thursday, 29 September 2011

நெத்திலிக் குழம்பு



நெத்திலிக் குழம்பை நேசிக்காத அசைவப் பிரியர்களே இருக்க முடியாது. எளிதாக சமைத்து ருசியாகச் சாப்பிட ஏற்றது நெத்திலி மீன். சமைச்சு சாப்பிட்டு பாருங்க.. சும்மா கும்முன்னு இருக்கும். என்னங்க எங்க கௌம்பிட்டீங்க... நெத்திலி குழம்பு வைக்கதானே......

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - ஒரு கை அளவு
தக்காளி - 3
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீ ஸ்பூன்
தனியா தூள் - 3 டீ ஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
எண்ணை - ஒரு குழிக்கரண்டி
கடுகு - ஒரு டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

* நெத்திலியை சுத்தம் செஞ்சுக்குங்க. எண்ணைய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை தாளிக்கவும்.

* வெங்காயத்தை பொன் முறுவலா வதக்கிட்டு, தக்காளியையும் போட்டு வதக்கணும்.

* பிறகு புளியைத் தேவையான அளவு தண்ணியில் கரைச்சு ஊத்தி, உப்பு போடுங்க.

* குழம்பு நல்லாக் கொதிக்கிறப்போ, கழுவி வச்ச நெத்திலி மீன்களைப் போட்டு, மீன்ல குழம்பு சேர்ந்ததும் இறக்கிடுங்க.

* காலைல வச்ச குழம்பை ராத்திரி சாப்பாட்டுக்கு சாப்பிட்டுப் பாருங்க. உலகத்தையே எழுதித் தருவீங்க.


'செப்' தாமு 
கூடல் தளம்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys