Thursday, 29 September 2011

காய்கறிகள் வாங்கும்போது கவனியுங்கள்...!



சில விஷயங்கள் நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும், அவைகளை அறிந்துகொள்ள தவறிவிடுவோம். அதுபோன்று அஜாக்கிரதையாக விடப்படும் சிலவற்றுள் காய்கறிகள் வாங்குவதும் ஒன்று. கடையில் வாங்கும் போது கடைக்காரன் கொடுப்பதை கண்மூடித்தனமாக வாங்கி விட்டு வீண் அவஸ்தைப்படுவதை தவிர்த்து சில நிமிடங்கள் செலவழித்து நல்ல காய்களை தேர்ந்தெடுங்கள்.

* முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.

* அவரையில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.

* வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண்டும்.

* கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக்கீரை, முளைக்கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.

* வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிஃப்ளவரை வாங்குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவை இருக்காது.

* வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும்போது விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக் கூடாது. நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.

* சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிரமாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.

* நன்றாகப் பழுத்த தக்காளிகளைவிட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.

* வாழைத்தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல், நூல் தெரிந்தால் ஓ.கே!

* சாதம் அல்லது டிபனுக்கு தொட்டுக் கொள்ளத்தான் காய்கறி என்று நினைக்காதீர்கள். அதுவும் சாப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இன்னொரு பகுதி தண்­ணீர். மூன்றில் ஒன்றுதான் சாதம் / டிபன்.

பிரேமா அரவிந்தன்
 

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys