Friday, 16 September 2011

சாக்லெட் சாப்பிடுங்க


                 'ஜிம்' போகாமல் 'ஜம்' மென இருக்க   
                தினமும் சாக்லெட் சாப்பிடுங்க.


          உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்க தினமும் காலையில் 'ஜிம்' போய் உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பல் கொள்பவரா நீங்க....? இனி,ஒரு சாக்லெட் பார் சாப்பிட்டு விட்டு போர்வைக்குள் ஒளிந்து தூக்கத்தை தொடரலாம் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சி. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராயிட் நகரில் உள்ள வேய்ன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு நடத்திய ஆராய்ச்சியில இது கண்டுபிடிக்கப்பட்டது.


                              உடற்பயிற்சிக்கும் சாக்லெட்டுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி ஆராயப்பட்டது. தீவிர உடற்பயிற்சி மற்றும் ஜாகிங் செய்யும்போது உடல் தசைகளை இறுகச் செய்யும் எபிகாடெக்கின் என்ற வேதிப்பொருள் சாக்லெட்டிலும் இருப்பது தெரிய வந்தது.



               உடற்பயிற்சி செய்வதால் தசைக்கு அளிக்கப்படும் ஊக்கம் போலவே சாக்லெட்டில் இருக்கும் எபிகாடெக்கின் செயல்படுவது உறுதியானது. தினமும் சாக்லெட் சாப்பிட்டால் கடின உடற்பயிற்சி செய்வதற்கு நிகரான பலனை பெற முடியும் என்று ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

             ஓட்டம்,சைக்கிள் ஒட்டுதல் ஆகியவற்றால் எபிகாடெக்கின் அதிகரித்து தசை செல்கள் ஊக்கம் பெறுகின்றன.அதே பயன் சாக்லெட்டிலும் கிடைக்கிறது.குறிப்பாக இதயம் மற்றும் எலும்புகளை சுற்றியுள்ள தசைகளில் இது சிறப்பாக செயல்படுகிறது.எனவே உடற்பயிற்சியின் பயனை சாக்லெட் அளிக்கும்.

இந்த ஆய்வு முடிவுகள் சைக்காலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளன.


0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys